கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். கடந்த, 2ம் தேதிமுதல்,கரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று காலை, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தை சேர்ந்த, இரண்டு அதிகாரிகள் சி.பி.ஐ., விசாரணைக்காக பயணியர் மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரம், எவ்வளவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதற்கான காரணம் என்ன, மின்சாரத்தை துண்டிக்க கோரிக்கை ஏதாவது வந்ததா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.