வரி வசூலில் மாநில அளவில் கரூர் மாநகராட்சி கடைசிக்கு முந்தைய இடம் பிடித்து சாதனை
கரூர்: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், வரி வசூலில் கரூர் கடைசி இடத்திற்கு முந்தைய இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட, 24 மாநகராட்சிகள் உள்-ளன. சொத்து வரி, காலி மனை வரி, நிறுவனங்களின் தொழில் வரி, குடிநீர் வரி ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நி-லையில், நடப்பாண்டில் மாநகராட்சிகளின் வரி வசூல் விபரம் வெளியாகியுள்ளது.இதில், தமிழக அளவில் சிவகாசி மாநகராட்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுவரை நிலுவை வரியாக, 56.31 லட்சம் ரூபாய், நடப்பாண்டு வரியாக, 15.56 கோடி ரூபாய் என மொத்தம், 16.12 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி வசூலில், 59.75 சதவீதமாகும். இரண்டாம் இடம் பிடித்த திருச்சி மாநகராட்சி, நிலுவை வரியாக, 31.07 கோடி ரூபாய், நடப்பாண்டு வரியாக, 124.01 கோடி ரூபாய் என மொத்தம், 155.09 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வரி வசூலில், 54.24 சத-வீதம். மூன்றாமிடம் பிடித்த, மதுரை மாநகராட்சி நிலுவை வரி-யாக, 77.49 கோடி ரூபாய், நடப்பாண்டு வரியாக, 197.43 கோடி ரூபாய் என மொத்தம், 274.93 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வரி வசூலில், 52.13 சதவீதமாகும்.கரூர் மாநகராட்சி 23 வது இடம்மாநில அளவில் கடைசி இடமாக, 24வது இடத்தை பெற்ற திரு-வண்ணாமலை மாநகராட்சி, நிலுவை வரியாக, 3.81 கோடி ரூபாய், நடப்பாண்டு வரியாக, 8.36 கோடி ரூபாய் என மொத்தம், 12.17 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது. வரி வசூலில், 35.31 சதவீதம். கரூர் மாநகராட்சி நிலுவை வரியாக 7.02 கோடி, நடப்பாண்டு வரியாக, 18.42 கோடி ரூபாய் என மொத்த வரி வசூல், 25.44 கோடி ரூபாயாக உள்ளது, வரி வசூலில், 35.93 சத-வீதம் பெற்று, 23 வது இடத்தை பெற்றுள்ளது. இது மாநில அளவில், கடைசி இடத்திற்கு முந்தைய இடமாகும். மேலும், ஈரோடு மாநகராட்சி நிலுவை, நடப்பாண்ண்டு வரி சேர்த்து, 58.47 கோடி ரூபாய் வசூல் செய்து, 49.43 சதவீதத்துடன், 8 வது இடத்தையும், நாமக்கல் மாநகராட்சி நிலுவை, நடப்-பாண்டு வரி இரண்டு சேர்த்து, 18.81 கோடி ரூபாய் வசூல் செய்து, 48.45 சதவீதத்துடன், 9வது இடத்தையும் பெற்றுள்ளது.சேலம் மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி சேர்த்து, 116.34 கோடி ரூபாய் வசூல் செய்து, 44.95 சதவீதத்துடன், 12வது இடத்-தையும், ஓசூர் மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி இரண்டும் சேர்த்து, 54.58 கோடி ரூபாய் வசூல் செய்து, 44.03 சதவீதத்துடன், 14 வது இடத்தையும் பெற்றுள்ளது.