உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அக்., 6 முதல் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கம் கரூர் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

அக்., 6 முதல் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கம் கரூர் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கரூர், 'கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து வரும், 6 முதல் பஸ்கள் இயக்கப்படும்' என, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்துள்ளார்.கரூர், திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டது. பின், கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்தது. இப்பணிகள் முடிவடைந்து, ஜூலை 9ல் திறக்கப்பட்ட நிலையில், எஞ்சிய பணிகள் நடந்தது. முழுமையாக முடிவடைந்ததால் வரும், 6 முதல் மக்கள் பயன்பாட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா கடிதம் அனுப்பி உள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாநராட்சிக்குப்பட்ட திருமாநிலையூரை ஒட்டி கருப்பம்பாளையம் பஞ்.,க்குப்பட்ட பகுதியில், 12.14 ஏக்கரில் புதிய பஸ் ஸ்டாண்டை ஜூலை 9 ல், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். தற்போது, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் கீழ், 'ஏ' கிரேடு புதிய பஸ் ஸ்டாண்டாக, ஓராண்டு காலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும், அக்., 6 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கொண்டுவரப்படுகிறது. அன்று முதல் இங்கிருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துறை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வந்து செல்ல வேண்டிய மார்க்கம்:* கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய பகுதியிலிருந்து வரும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும். மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சுக்காலியூர் ரவுண்டானா, சேலம் (திருக்காம்புலியூர்) ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.* மதுரை மார்க்கமாக வரும் பஸ்கள், சுக்காலியூர் ரவுண்டானா வழியாக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரவேண்டும். மதுரை மார்க்கத்தில் கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து புறப்பட்டு செல்லும், சேலம், ஈரோடு செல்லும் பஸ்களை, சுக்காலியூர் ரவுண்டானா, சேலம் ரவுண்டானா வழியாக இயக்கப்படும்.* திருச்சி, திண்டுக்கல் (வழி குஜிலியம்பாறை) மார்க்கமாக வரும் பஸ்கள், திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும். மீண்டும், அதே வழியில் செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை