உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயனற்று கிடக்கும் நிழற்குடை பஞ்., நிர்வாகம் கவனிக்குமா?

பயனற்று கிடக்கும் நிழற்குடை பஞ்., நிர்வாகம் கவனிக்குமா?

க.பரமத்தி: க.பரமத்தி அருகே பல லட்சம் ரூபாய் செலவில் உருவான நிழற்குடை மக்களுக்கு பயனற்ற நிலையில் உள்ளது. கூடலூர் கிழக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரின் அருகே அமைந்துள்ள நிழற்குடை கடந்த பத்து ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நகர், ரங்கப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்கள், தாராபுரம் கிழக்கு, கரூர், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நிழலுக்காக இந்த நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிழற் குடையில் அமரும் மே டை இடிந்தும், குப்பை மேடாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை