உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை எம்.எல்.ஏ., கோரிக்கை போட்டி, பொறாமைகளை மறந்து பணியாற்ற வேண்டும்

குளித்தலை எம்.எல்.ஏ., கோரிக்கை போட்டி, பொறாமைகளை மறந்து பணியாற்ற வேண்டும்

குளித்தலை: குளித்தலை, தோகமலை, கடவூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம் பேசுகையில்' குளித்தலை, தோகமலை பகுதி அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படும். மேலும், பஸ் செல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி தடையின்றி செய்து தரப்படும். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அ.தி.மு.க., அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வெற்றிப்பெற செய்ய வேண்டும். அப்போது தான் அ.தி.மு.க., அரசின் அனைத்து திட்டங்களும் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும். போட்டி, பொறாமைகளை மறந்து அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்து தமிழகத்தில் கரூர் மாவட்டம் முதலிடம் பெருமை எடுத்து தர அ.தி.மு.க.,வினர் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும்' என்றார்.கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, எம்.பி., தம்பிதுரை, எம்.எல்.ஏ., காமராஜ், குளித்தலை நகராட்சி தலைவர் வேட்பாளர் சோமுரவி, மருதூர், நங்கவரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர்கள் பிரகாசவேலு, மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் வினாயகம், ரவிச்சந்திரன், விஜயன், நளினி, கலைமணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். குளித்தலை அ.தி.மு.க., மகளிரணி செயலாளர் ராதிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை