| ADDED : ஏப் 28, 2024 04:20 AM
கூடுதல் விளக்குகள்அமைக்க எதிர்பார்ப்புகரூர்: கரூர்-ஈரோடு சாலை கோதை நகர், மருத்துவ நகர் பகுதிகளில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லை. தற்போது, அதிகளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.இதனால் இரவு நேரத்தில் விளக்குகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் கோதை நகர், மருத்துவ நகரில் அதிகளவில் மின் கம்பங்களை அமைத்து, கூடுதலாக விளக்குகளை போட, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரைபணி அமர்த்த வேண்டும்தான்தோன்றிமலை: கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் சாலையில், நாள்தோறும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகிறது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும் டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகிறது.இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. பொது மக்கள் சாலையை கடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைத்து, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.