உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், டவுன் பஞ்சாயத்து பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் குப்புரெட்டிப்பட்டி, லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, ஓமாந்துார், பழையஜெயங்கொண்டம், சமத்துவபுரம் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு, தேசிய கால்நடைகள் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.பசுமாடுகள், எருமை மாடுகள் உள்பட, 450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிருஷ்ணராயபுரம் கால்நடை மருந்தகம் உதவி மருத்துவ அலுவலர் கோகுல் தலைமையில் முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி மற்றும் கால்நடைத்துறை ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை