உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

குளித்தலை, குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காரணாம்பட்டியில் விநாயகர், மகா காளியம்மன், பாம்பாலம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய. கிராம மக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு கடந்த, 5 காலை குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புனிதநீர் எடுத்து வந்தனர்.புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாக சாலையில் வைத்தனர். தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கோமாதா பூஜையுடன் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது, பின்னர், கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது,விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை