மாடு, சைக்கிள் திருடிய கூலி தொழிலாளி கைது குளித்தலை, நவ. 30- மாடு, சைக்கிள் திருடிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கீதா, 35, கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமான சைக்கிளை நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு வீட்டில் நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்தில் சைக்கிளை காணவில்லை. தேடியபோது, அதே ஊரை சேர்ந்த தர்மலிங்
மாடு, சைக்கிள் திருடியகூலி தொழிலாளி கைதுகுளித்தலை, நவ. 30-மாடு, சைக்கிள் திருடிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கீதா, 35, கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமான சைக்கிளை நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு வீட்டில் நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்தில் சைக்கிளை காணவில்லை. தேடியபோது, அதே ஊரை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் தனது கன்று குட்டியை காணவில்லை என கூறியுள்ளார்.இருவரும் சேர்ந்து தேடி சென்ற போது, மேட்டுமகாதானபுரம் கட்டளை மேட்டு வாய்க்கால் அருகே, அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி, 45, என்பவர் சைக்கிளுடன், கன்று குட்டியையும் சேர்த்து பிடித்துச் சென்றார். அவரை இருவரும் பிடித்து, லாலாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.சங்கீதா கொடுத்த புகார்படி, பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.