உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவிலுக்கு சொந்தமான நிலம்; அரவக்குறிச்சி அருகே மீட்பு

கோவிலுக்கு சொந்தமான நிலம்; அரவக்குறிச்சி அருகே மீட்பு

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலம், நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டது.கரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பின்படி, அரவக்குறிச்சி அருகே உள்ள மொடக்கூர் மேற்கு கிராமம், மெய்பொருள் நாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, 8 ஏக்கர், 40 சென்ட் நிலம் மீட்கப்பட்டு கோவில் வசமானது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 1.50 கோடி ரூபாய். நிலம் மீட்பு நடவடிக்கையில் உதவி ஆணையர் ரமணி காந்தன், கோவில் செயல் அலுவலர் சரவணன், தாசில்தார் சத்தியமூர்த்தி, அரவக்குறிச்சி வட்ட ஆய்வர் சிபி சக்கரவர்த்தி, நில அளவையர்கள், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை