உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காகித ஆலை சார்பில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம்

காகித ஆலை சார்பில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம்

கரூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில், கட்டணம் இல்லாத தொழில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, ஆலை வளாகத்தில் நடந்தது.அதில், அதிக மதிப்பெண் அடிப்படையில் ஜீவா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருக்கு, காகித ஆலை பொது மேலாளர் தொழில் பட்டய படிப்புக்கான ஆணையை வழங்கினார்.இந்த திட்டத்தின் கீழ், 73 மாணவ, மாணவியர் பட்டய படிப்பு முடித்து விட்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.இந்த திட்டத்துக்காக நடப்பு கல்வியாண்டில், சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், எட்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், டி.என்.பி.எல்., மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்வராஜ், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ