தர்மபுரியில் சாரல் மழை
தர்மபுரியில் சாரல் மழைதர்மபுரி, நவ. 3-தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால், தர்மபுரி நகரில் கடும் வெயில் அடித்தது. இதனால், சாலையில் சென்ற மக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலை, 4:30 மணிக்கு, சாரல் மழை பெய்தது. காற்று மற்றும் இடியுடன் சாரல் மழையால், நகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.