உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு

கரூர்:தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தும், உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.பொதுவாக, 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடையை மீறி கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக டீக்கடைகள், டாஸ்மாக் பார்களில் அதிகளவில் பிளாஸ்டிக் கப் பயன்பாடு இருந்து வருகிறது. மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்கள் வீதிகளிலும், சாக்கடை கால்வாய்களிலும், நீர் ஆதாரங்களிலும் வீசப்படுவதால், சுகாதாரமற்ற நிலையும், நீர், நிலம் மாசுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு பேரணிகள் மட்டுமே நடந்துகின்றனர். விதிமுறைகளை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து, பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்வதோடு, பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களில் கோரிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ