மேலும் செய்திகள்
சம்பா நெல் நடவு பணி பொன்னேரியில் தீவிரம்
28-Sep-2025
கரூர், விவசாய பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால், சாகுபடி பணியில் வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி அணை நீர் திறப்பை நம்பி, 90 சதவீதம் நெல் சாகுபடி நடக்கிறது. கடந்தாண்டு அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட, 36,324 ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது. இந்த ஆண்டு ஜூன், 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டும், 35,830 ஏக்கர் என்ற அரசின் இலக்கை விட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் போதிய ஆட்கள் இல்லாததால், வட மாநில தொழிலாளர்களை சாகுபடி பணிகளில் ஈடுபடுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர், தோகைமலை ஆகிய வட்டாரங்களில் நடவு முறையில் பயிர் சாகுபடி நடப்பதால், அதிகளவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். மேலும், நாற்றங்கால் பறிப்பு, நடவு ஆகிய பணிக்கு உள்ளூர் பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். அவர்கள் காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை மட்டுமே வேலை செய்கின்றனர். இதனால், செலவு மற்றும் காலம் விரயம் ஏற்படுகிறது. 100 நாள் திட்டத்தில் கூலி கூடுதலாக கிடைப்பதால், ஆட்கள் கிடைப்பது திண்டாட்டமாக உள்ளது.இப்பகுதியில் ராஜஸ்தான், மேற்கு வங்காள தொழிலாளர்களை வரவழைத்து சாகுபடி பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். ஒரு நாளில், 4 முதல், 5 ஏக்கர் நடவு செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு, 4,700 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. கயிறு கட்டி மிக நேர்த்தியாக நடவுப் பணிகளை மேற் கொள்கின்றனர். இந்த தொழில் நுட்பத்தில் நடவு பணியை செய்வதால், எலி தாக்குதல் குறைவதோடு மகசூல் அதிகரிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
28-Sep-2025