கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன்
கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, ஆறுமுக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த, 22ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காப்பு கட்டுதல், உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு ஆறுமுக பெருமான், வள்ளி, தெய்வானை உடனான உற்சவர் சுவாமி திருவீதி உலா நடந்தது. அதையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள, ஆறுமுக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.