குளித்தலை: மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் ஆடி-19 விழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்-துவர். இந்நிகழ்ச்சி குறித்து ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடை-பெற்றது.குளித்தலை அருகே, மேட்டுமகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோவில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்-ளது. ஆண்டுதோறும் ஆடி-19 அன்று நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைக்கும் வழிபாடு நடைபெறும். விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., செந்-தில்குமார், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் குடிப்-பாட்டுக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டி நிர்வா-கிகள் பங்கேற்றனர். விழாவில் பிளக்ஸ் பேனர் தட்டிகள், சமு-தாயம் குறித்த ஒலிபரப்பு செய்யக்கூடாது, அரசு அலுவலர்கள், விழா குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் டோக்கன் வழங்கல், தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் மொபைல்போன் கொண்டு வர அனுமதி இல்லை என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டது. விழா சிறப்பாக நடைபெற பொது மக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க-வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.கோவில் பரம்பரை பூசாரி, போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார், கிருஷ்ணராயபுரம் யூனியன் கமிஷனர், தீயணைப்பு துறை, சுகாதார துறை, மின் வாரியம், போக்குவரத்து துறை, நீர்வ-ளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.