உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகாளய அமாவாசை வழிபாடு; கோவிலில் குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசை வழிபாடு; கோவிலில் குவிந்த பக்தர்கள்

கொடுமுடி: புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, நேற்று கொடுமுடியில் ஆயிரக்கணக்கான பக்-தர்கள் காவிரியில் புனித நீராடி, முன்னோர்க-ளுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர்.நேற்று அதிகாலையிலிருந்தே, ஆயிரக்கணக்-கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன், கொடுமுடி காவிரி ஆற்றில் திரண்டனர். அங்கு பழைய மற்றும் புதிய படிக்கட்டு பகுதிகளில், புரோகிதர்களை கொண்டு தங்கள் மூதாதையர்க-ளுக்கு பிண்டம் வைத்து, தர்ப்பணம், திதி கொடுத்தனர். தொடர்ந்து, மகுடேஸ்வரர், வீரநா-ராயண பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவில் முன்புறம் பக்தர்கள் பரிகாரம் செய்ய ஏதுவாக ஷாமியானா பந்தல் ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வித-மாக, பொது தரிசனத்திற்கும், சிறப்பு தரிசனத்-திற்கும் என தனித்தனியே பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளை வழிபட்டனர். காவிரி ஆறு மற்றும் கோவில் பகுதிகளில் கொடுமுடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.* ஈரோடு, காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழி-பட்டனர். மகாளய அமாவாசையான நேற்று, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் அதிகாலை முதலே மக்கள் நீராடினர். பின் முன்-னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோன்று, மாவட்-டத்தில் ஆற்றங்கரையோரங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழி-பட்டனர்.மகாளய அமாவாசையையொட்டி ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவில், ஈஸ்-வரன் கோவில், பெரியமாரியம்மன் கோவில்-களில், சிறப்பு வழிபாடு நடந்தது.* சத்தியமங்கலம், ஸ்ரீஐயப்ப சேவா அறக்கட்-டளை சார்பில், பவானி ஆற்றங்கரையோரத்தில் மகேந்திரவேல் தலைமையில், முன்னோர்க-ளுக்கு தர்ப்பண பூஜை நடைபெற்றது. நேற்று காலை, 5:00 மணிக்கு கோபூஜையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மகாளய அமாவாசையை ஒட்டி, அமராவதி ஆற்றங்க-ரையில், நேற்று, ஏராளமானோர் தங்கள் முன்-னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.புரட்டாசி மாத அமாவாசை, மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. பித்ருக்களுக்கு தர்ப்-பணம் செய்ய உகந்த நாளான, மகாளய அமாவா-சையான நேற்று காலை, 6:00 மணி முதல், தாரா-புரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள அம-ராவதி நதிக்கரையில், திரளான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு, பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தனர். இதன் மூலம், தங்களது தோஷங்கள் நீங்கி வம்சம் வளம் பெறும் என்பது, மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை