உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பராமரிப்பு இல்லாத கூடலுார் சந்தை வளாகம்

பராமரிப்பு இல்லாத கூடலுார் சந்தை வளாகம்

கரூர்: -கரூர் மாவட்டத்தில், கூடலுார் சந்தை வளாகம் பராமரிப்பு இன்றி காணப்படுவதால், வியாபா-ரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்-றனர்.க.பரமத்தி அடுத்த கூடலுாரில், வீரமாத்தி-யம்மன் கோவில் அருகே வியாழன்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறுகுறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடை போடுகின்றனர். பல்-வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வாரச்சந்தைக்கு செல்கின்றனர். சந்தை வளா-கத்தில், கடைகளுக்கான மேடை, குடிநீர், கழி-வறை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், பொதுமக்கள், வியாபாரிகள் அவ-திப்படுகின்றனர். வியாபாரிகள் இயற்கை உபா-தையை கழிக்க பொதுவெளிகளை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து, சந்தையை விரிவுபடுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை