மேலும் செய்திகள்
தந்தை மாயம்; மகன் புகார்
29-Oct-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ், 19, கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் வேலைக்கு சென்று விட்டு, சம்பளம் பணம் 4,000த்துடன் நண்பர்கள் வருகைக்காக, பைக்கில் லாலாபேட்டை மேம்பாலம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த, அதே ஊரை சேர்ந்த சசிகுமார், 23, என்பவர் பட்டா கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி, 4,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து ஹரிஷ் கொடுத்த புகாரின்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்தனர்.
29-Oct-2025