உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

அரசு தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

கரூர்: கரூர் அருகே, கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தொடர்பான, பெற்றோர் ஆலோசனை கூட்டம், தலைமையாசியர் பரணிதரன் தலைமையில் நேற்று நடந்தது. பள்ளியில் வாரந்தோறும் ஒரு மணி நேரம் பரதநாட்டியம், செஸ், சிலம்பம், ஆங்கில பேச்சு பயிற்சி, கலைகளின் சங்கமம் நடத்துவது, பள்ளி நுாற்றாண்டையொட்டி, நினைவு வளைவு அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், ஆசிரியர்கள் அமுதா ராணி, ஜூலி ரீட்டா மேரி, தெரசா ராணி, ஜெய பாரதி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை