உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெங்கடாஜலபதி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

வெங்கடாஜலபதி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார், தேவேந்திர குல தெருவின், தெற்கு வீதியில் வெங்கடாஜலபதி கோவில் புதிதாக கட்டப்பட்டது.கடந்த மார்ச், 9ல், இக்கோவில் கும்பாபிஷேக விழா கோலா-கலமாக நடந்தது. அன்று முதல், தினந்தோறும் இரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று காலை, 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை, சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆரா-தனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, திருச்சி தனியார் மகளிர் கலை கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் பத்மப்பிரியா சொற்பொ-ழிவாற்றினார்.மண்டல பூஜை நிறைவு விழாவில், கோவில் குடிப்பாட்டுக்கா-ரர்கள், பக்தர்கள், கிராம மக்கள் என, பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை