உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரூர்பட்டி பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு

மரூர்பட்டி பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, மரூர்பட்டியில் பிரசித்தி ‍பெற்ற பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு, வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மலை உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், பக்த ஆஞ்சநேயருக்கு, 35 கிலோ வெண்ணையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை