நடமாடும் மருத்துவ முகாம் இதுவரை 2,087 பேர் பயன்
கரூர்:புகழூர், டி.என்.பி.எல்., நிறுவனத்தின் சார்பில் நடந்த நடமாடும் மருத்துவ முகாமில், 2,087 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ், நடமாடும் இலவச மருத்துவ முகாமை மேலாண்மை இயக்குனர் சந்தீப் சக்சேனா கடந்த பிப்., 21ல், தொடங்கி வைத்தார். இதையடுத்து புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகழூர் மற்றும் திருக்காடுதுறை ஆகிய பஞ்சாயத்துகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடக்கிறது.இதில், பொன்னியாக் கவுண்டன்புதுாரில், 50-வது மருத்துவ முகாம் நடந்தது. 859 பேருக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்த மருத்துவ முகாமில், 2,087 பேர் பயனடைந்துள்ளனர்.