மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் இல்லாத ஒரகடம் தீயணைப்பு நிலையம்
18-Jan-2025
கரூர்: வெள்ளியணை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் சாலையை, அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.கரூர் நகரில் இருந்து, தான்தோன்றிமலை, மணவாடி, வெள்ளி-யணை, கூடலூர், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார், எரி-யோடு வழியாக, பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட வாக-னங்கள் திண்டுக்கல்லுக்கு செல்கின்றன.ஆனால், மதுரை, திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு, தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பின், வாகனங்கள் வெள்ளி-யணை சாலையில் செல்வது குறைந்து வருகிறது. இதனால், வெள்ளியணை - திண்டுக்கல் சாலையில் உள்ள, பல்வேறு கிராம பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் போது, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து வரும் திண்டுக்கல்லுக்கு, வெள்ளியணை வழியாக திருப்பி விடப்-படுகிறது.இதனால், அடிக்கடி வெள்ளியணை - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வெள்ளியணை - திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக-லப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்-றனர்.
18-Jan-2025