உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கரூர்: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவ-சாயிகள், பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில், கரூர் மாநகராட்சியை ஒட்-டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை, சாலையில் திரிய விடுகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன், கோவை சாலை, ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய சாலை-களில் கால்நடை நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகி-றது.மேலும், மாடு, ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், சில நேரம் விபத்து ஏற்படு-கிறது. தவிர, சாலைகளில் திரியும் ஆடுகள், இப்-பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை