மேலும் செய்திகள்
குழாய் பதிக்க தோண்டிய குழிகள்
13-Sep-2025
கரூர்;கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள, 11 கிராஸ்களில் இரண்டு பக்கமும் செல்லக்கூடிய வகையில் தெருக்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் குடோன்கள் உள்ளன. நகரின் முக்கிய வர்த்தக பகுதியாகவும் விளங்குகிறது. இந்த தெருக்களில், ஆங்காங்கே காய்கறி தரைக்கடைகளும் உள்ளன. எப்போதும், இப்பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும். டெக்ஸ்டைல்ஸ், குடோன்களுக்கு வரும் வேன்கள், மினி லாரிகள், லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி கொள்வதால் பொதுமக்கள் நடந்தோ, டூவீலரிலோ செல்ல முடியாமல் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.செங்குந்தபுரத்தில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், குடோன்கள் அமைந்துள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பஸ் ஸ்டாண்டில் இறங்கி இப்பகுதி வழியே, அவரவர் பணிபுரியும் இடங்களுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக செங்குந்தபுரம் பகுதியில் காலை முதல் இரவு வரை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
13-Sep-2025