மேலும் செய்திகள்
குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி
26-Sep-2025
கரூர்:கரூரில், குழாய் பராமரிப்பு நடந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன், குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால், அதை சரி செய்ய குழிகள் தோண்டப்பட்டு, பராமரிப்பு வேலைகள் நடந்தன. தற்போது, பராமரிப்பு வேலை முடிந்த நிலையில், புதிதாக தார்ச்சாலை அமைக்காமல், மண், ஜல்லிக்கற்கள் கொட்டி குழியை மூடியுள்ளனர்.இதனால், மழை பெய்யும் போது அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், அந்த பகுதியில் ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்கள், பூ மார்க்கெட், ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே, குடிநீர் குழாய் பராமரிப்பு நடந்த இடத்தில், புதிதாக தார்ச்சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது வேண்டியது அவசியம்.
26-Sep-2025