உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் தவிப்பு

கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர், கரூர் தமிழ்நகர் அருகில், சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, தான்தோன்றிமலை காமராஜ் நகர் கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் நகர் உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு தனியார் பள்ளி அருகே மற்றும் வள்ளலார் கோவிலுக்கு அருகில் உள்ள பல சாலைகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக உள்ளது. புதிய குடியிருப்புகள் உருவாகும்போது போடப்பட்ட மண்சாலையாகத்தான், தற்போதும் உள்ளன. இந்த சாலையை சீரமைக்க கோரி, பல ஆண்டுகளாக மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், வள்ளலார் கோவிலுக்கு அருகில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜல்லிகள் கொட்டிய நிலையில் மற்ற பணிகள் எதுவும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் தவித்து வருகின்றனர்.இதுபோன்ற முக்கிய இடங்களில், உடனடியாக சாலை அமைக்க வேண்டும். ஜல்லி கற்களை நிரப்பிய பின், பல நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். மக்கள் நலன் கருதி சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை