சாலைகளில் குவியும் குப்பை கண்டுகொள்ளாத மாநகராட்சி
கரூர், கரூர் மாநகராட்சியில், சாலையோரம் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகளில் தினமும், 130 டன் குப்பை சேகரமாகின்றன. இவை அனைத்தும் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு, வாங்கல் சாலையில் உள்ள அரசு காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான, 24.50 ஏக்கரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, துாய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும்போது மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி செல்கின்றனர்.ஆனால், மாநகராட்சி எல்லை ஒட்டியுள்ள வார்டுகளில் தினமும் குப்பை வாங்க வருவது கிடையாது. இதனால், இரவு நேரங்களில் குப்பைகளை வீதியில் வீசி செல்கின்றனர். பெரிய நிறுவனங்கள், ஓட்டல் வைத்திருப்பவர்களும் சாலையோரம் குப்பையை கொட்டி விடுகின்றனர். சாலைகளில் தேங்கி நிற்கும் குப்பைகளால், பல்வேறு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.