உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நகராட்சி வார்டு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகராட்சி வார்டு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

குளித்தலை:குளித்தலை நகராட்சி, 16வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் கடந்தாண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த வார்டுக்கான இடைத்தேர்தல், குளித்தலை நகராட்சி ஆணையர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை, வாக்காளர் வரைவு பட்டியலை நகராட்சி கமிஷனர் நந்தகுமார் அனைத்து கட்சியினர் கூட்டத்தில் வழங்கினார்.தமிழக அரசு தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான தகவல்களை, குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது, 849 வாக்காளர்கள் இந்த வார்டில் உள்ளதாக வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், தி.மு.க.,-அ.தி.மு.க., -பா.ஜ., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி