உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / என்.எஸ்.எஸ்., தொடக்கவிழா விழிப்புணர்வு கருத்தரங்கம்

என்.எஸ்.எஸ்., தொடக்கவிழா விழிப்புணர்வு கருத்தரங்கம்

குளித்தலை:குளித்தலை அடுத்த, தரகம்பட்டி அரசு கலை அறிவியில் கல்லுாரி சார்பாக, நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் ஹேமாநளினி தலைமை வகித்து பேசியதாவது:நாட்டு நலப்பணிகள் திட்டம், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், 1969ல் தொடங்கப்பட்டது. ஜனநாயக வாழ்க்கை முறையின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதோடு, தன்னலமற்ற சேவையின் தேவையை வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டம் ஒரு தனிப்பட்ட மனிதனின் நலன் மட்டும் அல்ல, முழு சமூகத்தின் பொது நலத்தையே சார்ந்து இருப்பதை காட்டுகிறது. சமூக சேவை மூலம் ஆளுமையை வளர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டம், மாணவர்களுக்கு சமூக நல எண்ணங்களை கற்பிக்கவும், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பேசினார்.கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை