உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 1.19 லட்சம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி: கலெக்டர்

மாவட்டத்தில் 1.19 லட்சம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி: கலெக்டர்

கரூர் :''கரூர் மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 109 மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறனை மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதலாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தில், மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக அரும்பு, மொட்டு, மலர் என சிறப்பாக கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 109 மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி, வட்டார கல்வி அலுவலர் பாண்டித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை