உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கிறிஸ்டல் ஹெப்சி தலைமை வகித்தார். தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 6,500 செவிலியர்களை, நிரந்தர செவிலியர்கள் பெறும் முழுமையான காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு, முறையான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் அரசு செவிலியர் கல்லுாரிகளில், செவிலியர் மற்றும் செவிலியர் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். இக்கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், திரளான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை