மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
ராசிபுரம், ராசிபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்பாக்,41. இவர், சேலம் சாலையில் யு.பி.எஸ்., விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் நடத்தி வந்தார். நாமக்கல் ரோடு, பாரதி தியேட்டர் எதிரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள யு.பி.எஸ்., கடந்த சில தினங்களுக்கு முன் பழுதானது. இதை சரிசெய்த அஸ்பாக் நேற்று மீண்டும் பொருத்த சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அஸ்பாக் இறந்தார்.