உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிணற்று நீர் பாசன முறையில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

கிணற்று நீர் பாசன முறையில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கிணற்று நீர் பாசன முறையில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், திருமேனியூர், வடுகப்பட்டி, வாத்திக்கவுண்டனுார், மலையாண்டிப்பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாதம் விளைச்சல் கண்ட நெற்கதிர்கள் அறுவடை பணி நடந்தது. தற்போது மீண்டும், அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களில் கிணற்று நீர் பாசன முறையில் நெல் நடவு பணி துவங்கி நடந்தது வருகிறது. கிராமங்களில் உள்ள கிணற்றில் நீர் மட்டம் இருப்பதால், விவசாயிகள் நெல் சாகு படிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி