உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் பைக் மோதி நடந்து சென்ற பெயின்டர் பலி

குளித்தலையில் பைக் மோதி நடந்து சென்ற பெயின்டர் பலி

குளித்தலை, குளித்தலை, சேதுரத்தின பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆண்டியப்பன், 41, பெயின்டர். கடந்த 1ம் தேதி இரவு, 9:00 மணியளவில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், பெரியார் நகர் கள்ளுப்பாலம் அருகே, வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்ல, பெரியபாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் நடந்து வந்தார்.அப்போது, பின்னால் வந்த 'ஏ' சிட்டி நகரை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்த, ஹீரோ ஸ்பிளண்டர் பைக் ஆண்டியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆண்டியப்பனுக்கு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து ஆண்டியப்பன் மகள் சவுந்தர்யா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ