உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரி செலுத்த பொதுமக்களுக்கு பள்ளப்பட்டி நகராட்சி அறிவிப்பு

வரி செலுத்த பொதுமக்களுக்கு பள்ளப்பட்டி நகராட்சி அறிவிப்பு

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்கு, வரி செலுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அரவக்குறிச்சி தாலுகா பகுதியில் பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான வாடகை, கடைகளுக்கான லைசன்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட வரி இனங்களை உடனடியாக செலுத்த வேண்டும். இது தொடர்பாக, நகராட்சிக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.மேலும், பள்ளப்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எவரேனும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், ஆன்லைன் மூலமாகவும் அவர்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தலாம் என, நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ