உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோகைமலையில் பஞ்சாயத்து கடை ஏலம்

தோகைமலையில் பஞ்சாயத்து கடை ஏலம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாக கடைக-ளுக்கான பொது ஏலம் நேற்று மதியம் பஞ்., அலு-வலகத்தில் பஞ்., தலைவர் தனமாலினி, துணைத் தலைவர் சக்திவேல், யூனியன் மண்டல மேலாளர் இந்திராணி, முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் ஒரு லட்சம் முன்பணம் செலுத்தி, ஏழு பேர் கடை ஏலம் எடுக்க வந்தனர். 3 வது எண் கடையை, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கார்த்திகேயன் என்பவர் ஏலம் எடுத்தார். மற்ற கடைகளை ஏலம் எடுக்க ஏல-தார்கள் முன்வராததால், ஏலம் பின்னர் அறிவிக்-கப்படும் என பஞ்., தலைவர் தெரிவித்தார்.ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்கள், பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வந்து செல்ல முடியாத வகையில் போக்குவரத்து, மக்களுக்கு இடையூ-றாக கடை நடத்துபவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ