மேலும் செய்திகள்
27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
24-Oct-2025
கரூர், திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27ல் கரூரில் நடக்கிறது.இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆஷிஸ் குமார் திரிபாதி வெளியிட்ட அறிக்கை: பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27 காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் திருவள்ளுவர் நகரில் உள்ள ஸ்ரீ ராமா டிரேடிங் லிமிடெட் நிறுவனத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
24-Oct-2025