மின் தடையால் மக்கள் பாதிப்பு
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்சாயத்து, மேட்டுமருதுார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டனர். மின்வாரியம் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்பாதைகளை சரி செய்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.