உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிழற்கூடம் இல்லாததால் மக்கள் கடும் அவஸ்தை

நிழற்கூடம் இல்லாததால் மக்கள் கடும் அவஸ்தை

நிழற்கூடம் இல்லாததால்மக்கள் கடும் அவஸ்தைகிருஷ்ணராயபுரம், நவ. 20-மகாதானபுரம் நெடுஞ்சாலை அருகில், நிழற்கூடம் இல்லாததால், மக்கள் அவதி தொடர்கிறது.கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில், மகாதானபுரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கரூர், திருச்சி ஆகிய இடங்களுக்கு மக்கள் பஸ்களில் ஏறி செல்கின்றனர். கரூர் செல்லும் வழித்தடங்களில், மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில் இரண்டு நிழற்கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி செல்லும் வழித்தடத்தில் நிழற்கூடம் கட்டப்படவில்லை. கடந்த ஆண்டு தற்காலிகமாக கீற்று கொட்டகை மூலம் நிழற்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. மழைால் அந்த நிழற் கூடமும் சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு இதுவரை நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் தினமும் மழை மற்றும் வெயில் காலங்களில், திருச்சி வழித்தடத்தில் நின்று அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில், ஒரு நிழற்கூடமாவது அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ