உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழை நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள்

மழை நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை முன், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பள்ளப்பட்டி பகுதியில் பழைய அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால், புதியதாக அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், மருத்துவமனை வளாகம் முன்புறம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை