மேலும் செய்திகள்
சேதமான பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் கடும் அவதி
15-Sep-2024
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில் பய-ணியர் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடம் அருகே எந்த பஸ்களும் நிற்காமல், ஈரோடு, கரூர் செல்லும் நெடுஞ்-சாலை ஓரத்தில் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால், அங்கு சென்று பொதுமக்கள் பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக காலியாக உள்ள நிழற்கூடத்தில், 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டூழியம் செய்கின்றனர்.மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக, இந்த நிழற்கூடம் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பய-ணிகள் நிழற்கூடத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
15-Sep-2024