தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வாங்க திரண்ட மக்கள்
கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கரூரில் தற்காலிகமாக அமைக்-கப்பட்டுள்ள மார்க்கெட்டில், ஜவுளிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபாவளி பண்டிகை வரும், 20ல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பொதுமக்கள் புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கரூரில் ஜவஹர் பஜார், எம்.எல்.ஏ., அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக, தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்-ளன. அதில், ஜவுளி, காலணிகள், பட்டாசு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், நேற்று விடுமுறை நாள் என்-பதால் காலை, 10:00 மணி முதல் பொதுமக்கள் கூட்டம், ஜவஹர் பஜாரில் களை கட்டியது.