உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரத்தில் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம், நவ. 2-கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், லோசன சாரல் மழை பெய்ததால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பிள்ளபாளையம், வீரவள்ளி, சீகம்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மதியம் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சி நிலவியது.மேலும் நெற் பயிர்கள் நடுவில் வளர்ந்த களைகள் அகற்றப்பட்டு, இயற்கை உரம் தெளிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். லேசான மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழையால் வெப்பம் தணிந்தது. மானாவாரி பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.சூடு தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ