உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி

வேங்காம்பட்டியில் சாலை வசதியின்றி மக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி, வைகோ நகர் பகுதிக்கு சிமென்ட் சாலை இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி கிராமத்தில் வைகோ நகர் உள்ளது. மழை காலங்களில், சாலைகளில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிமென்ட் சாலை அமைக்க வேண்டி மக்கள் பல முறை கோரிக்கை மனுக்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை