உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை

தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை

கரூர், கரூர் அருகே, தென்னிலையில் நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்படுகின்றனர்.கரூர்--கோவை சாலையில் தென்னிலை கிராமம் உள்ளது. அந்த பகுதியில், தனியார் பொறியியல் கல்லுாரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, புலியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும், பஸ் ஏறி செல்ல வேண்டும். ஆனால், தென்னிலை பஸ் ஸ்டாப்பின், ஒரு பகுதியில் மட்டும் (கோவை சாலை) நிழற்கூடம் உள்ளது. கரூர் சாலையில் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தென்னிலை பஸ் ஸ்டாப்பில், கரூர் சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ