உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேறும் சகதியுமான நெடுஞ்சாலை சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்

சேறும் சகதியுமான நெடுஞ்சாலை சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்

குளித்தலை: குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை, சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை அடுத்த, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் ரயில்வே பாதை வழியாக நடுப்பட்டி, பணிக்-கம்பட்டி, அய்யர்மலை, தோகைமலை, கூடலுார் உள்ளிட்ட முக்-கிய கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். மேலும், பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் சாலையாக இருந்து வருகிறது.இந்த நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் ராணி மங்கம்மாள் சாலைமுதல், தேசிய நெடுஞ்சாலை வரை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. இந்த சாலையில் மழை தண்ணீர் தேங்குவதால், மக்கள் கடுமை-யாக பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புற மக்கள் நலன் கருதி, சேதமடைந்த நெடுஞ்சாலை-யைய சீர்படுத்திட முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை