உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண வெங்கடரமண கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் முறைப்படுத்த கோரி மனு

கல்யாண வெங்கடரமண கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் முறைப்படுத்த கோரி மனு

கல்யாண வெங்கடரமண கோவிலில்வி.ஐ.பி., தரிசனம் முறைப்படுத்த கோரி மனுகரூர், அக். 1- கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் வி.ஐ.பி.,தரிசனம் முறைப்படுத்த வேண்டும் என, லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு அக்., 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சனிக்கிழமையையொட்டி, நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமியை வழிபட்டு வருகின்றனர். கோவில்களுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு தரிசனம் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வி.ஐ.பி.,க்கள் என்ற பெயரில், 10 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள், கோவில் உள்ளே நீண்ட நேரம் உட்கார அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் மற்றும் தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.அவர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வி.ஐ.பி., தரிசனம் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், வி.ஐ.பி., தரிசனத்தை தவிர்க்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மற்றவர்களை கட்டணம் தரிசன வழியாக அனுமதி வேண்டும். அவ்வாறு செய்தால், வரிசையில் நிற்கும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ