உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓட்டுச்சாவடி அலுவலர் மீது விசாரணை நடத்த கோரி மனு

ஓட்டுச்சாவடி அலுவலர் மீது விசாரணை நடத்த கோரி மனு

கரூர், கடந்த லோக்சபா தேர்தலில், பூத் சிலிப் முறையாக வழங்காத ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலர் கலையரசன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, 165வது ஓட்டுச்சாவடியில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக வழங்கப்படவில்லை. நேரடியாக ஒப்புதல் பெறவில்லை, வாக்காளர் ஒப்புகை கையொப்பத்தை போலி ஆவணம் தயாரித்து அனுப்பிய, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.அதில், கரூர் ஆர்.டி.ஓ., ஆறு வாரத்திற்குள் புகார் தொடர்பாக விசாரணை முடித்து, கரூர் கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பின், நான்கு வாரத்திற்குள் கரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை